பக்கம்:கனியமுது.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆனந்தம் கவிதைகள்

ஆனந்தம் கவிதைகள்

திருவாளர் மணிக்குஉன்னைப் பிடித்துப் போகும்!

சென்னையிலே உயர்அலுவல் எனினும், இன்றே

பெருநகராம் பம்பாய்க்குப் புதிதாய் வந்தார்!

பேசுதற்கும், பிரியமுடன் பழகு தற்கும்,

அருவாய்ப்பாய் உங்துவண்டி ஏறி, விேர்

அரைகாளில் ஓரளவு சுற்றிப் பார்த்து,

வருவீர்! நான், அதற்குள் என் கணவர் இங்கே

வரக்கூடு மா,என்று தெரிவேன்” என்றாள் !


திகைப்பாலே வாய்மொழியை மறந்தி குந்த

செல்வனுக்குக் கசக்திடுமோ இவ்வேற் பாடு:

மிகப்பலவாய்ப் பல்தெரியக் குழறிக் கொண்டே

வெளிச்சென்றான், துணையான இளம் பெண்ணோடு!

நகை பண்றி வறுங்கை அணியா மங்கை

நாகரிக உச்சியிலே நிமிர்ந்து நின்றாள்:

புகைபோன்ற புடைவைக்குள் கொப்பூழ் தோன்றும்

புதுமையான கையில்லாச் சட்டை மேலே!

36

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனியமுது.pdf/46&oldid=1380274" இலிருந்து மீள்விக்கப்பட்டது