பக்கம்:கனியமுது.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கனியமுது


புத்தரைப்போல் உயர்கொண்டை! குதியு யர்ந்த

பொன்னிறத்துக் காற்செருப்பே உதட்டில் சாயம்!

மெத்தவிரை வாய்ச்செல்லும் வண்டி நின்றால்,

மெதுவாக அவள்தோள்மேல் வீழ்வான்; மீள்வான் !

வித்தியாச எண்ணமின்றிச் சிறிது தூரம்

விறுவிறுப்பாய்ப் பேசிவங்தாள் கூச்ச மின்றி

உத்தமனும் அல்லன் அவன்! உணர்வு மங்கி

உதட்டோடும் இதழ்பொருத்தி முத்தம் ஈந்தான்!


அவ்வளவே...! 'பளிர்'என்று மின்னலைப்போல்

அறைந்திட்டாள் கன்னத்தில் மாறி, மாறி!

செவ்வாயில் குருதிகொட்டத் திடுக்கிட்டுப்போய்ச்

சிந்துகின்ற கண்ணிரும் துடைத்தி டாமல்'

"இவ்வளவும் உன் தமக்கை செய்த குற்றம்!

யான் உன்னைப் பெண்பார்க்க வரவே யில்லை!

எவ்வளவோ தடுத்துரைக்க எண்ணிக் கூட

என்பேச்சை எங்கேஉன் அக்கா கேட்டாள்?

36

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனியமுது.pdf/47&oldid=1380114" இலிருந்து மீள்விக்கப்பட்டது