பக்கம்:கனியமுது.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆனந்தம் கவிதைகள்


நண்பனுக்குத் திருமணந்தான் கடந்த போது

நலிந்திருந்தாள் என்மனைவி பிள்ளைப் பேற்றால்:

அன்புடனே அழைத்தும்வர இயல வில்லை;

அலுவலகம் விடுமுறையால் இன்று வந்தேன்! என்பொல்லாக் காலமன்ருே? இரண்டாம் மாடி ஏறுதற்குத், தவறுதலாய் மூன்றில் வந்து, முன்பல்லைப் பறிகொடுத்தேன்! எங்கே சொல்வேன்?

முகத்தையெங்கே வைத்திடுவேன்" எனக் கரைந்தான்.

வண்டியோட்டி வியப்புடனே நிறுத்தி விட்டான்.

மராட்டிமொழி பேசவல்ல அழகு கங்கை, கண்டேகர் என்கின்ற மருத்து வர்பால்

கடிதாக ஒட்டுமாறு சொல்லிக் கொண்டேதண்டனையால் தவிக்கின்ற பிள்ளைக் குத்தன்

தலைப்புச்சே அலகிழித்துத் துடைத்தாள் வாயை! மண்டிவரும் குருதியினைப் பார்த்த பின்னே,

மன்னிப்புக் கோருகின்ருள் தவற்றுக் காக1

37

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனியமுது.pdf/48&oldid=1380345" இலிருந்து மீள்விக்கப்பட்டது