பக்கம்:கனியமுது.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆனந்தம் கவிதைகள்


மூதடுற்கு மறந்துவிட்ட குழாய்த்தண் ணீர்போல்

மொள்ளாமல் வார்த்தைகளைக் கொட்டிக் கொண்டே

கூடுதலாய்ப் பேசுகின்றான் ஒருவன்! நல்ல

கோமாளியா? பித்தனா? என்றேங்கி

வாடுகிறாள் தனிமையிலே உள்ளி ருக்கும்

வனிதையவள், அண்மையிலே மணந்து வங்தாள் !

ஒடுதற்கும் வழியின்றி மறைக்கின்றானே:

ஒருவழியுங் காணேனே!' எனத்த வித்துத்


'தவறாக...' எனப்பேச்சைத் துவக்கு தற்குள்-

"தயவுசெய்து நீ அவ்வா றெண்ண வேண்டாம்,

சுவரா நான்? அவர்களெல்லாம் வரும்வரைக்கும்

சுவையாகப் பாட்டொன்று பாடேன் கேட்போம்!

எவருடைய இசையரங்கும் நானில் லாமல்

என்ஊரில் நிகழாது பைத்தி யங்தான்!

நவராத்ரிப் பொம்மைபோல் அசைய மாட்டேன்!

நாணமென்ன? பக்கத்தில் அமர லாமே!”

39

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனியமுது.pdf/50&oldid=1380161" இலிருந்து மீள்விக்கப்பட்டது