பக்கம்:கனியமுது.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கனியமுது


படபடெனப் பேசியவன் பின் நகர்ந்தான்

பளபளக்கும் சலவைக்கல் தரைவழுக்கித்

தடதடெனக் குப்புறவே வீழ்ந்தான்! கீழே

தரைமீது முகம் பதிய-மூக்கும் பல்லும்
கடகடென மோதியதால் நிலம்சி வக்கக்
கண்டுகின்ற பெண்தகையாள் கதிக லங்கிச்
சடசடென நீர்தங்து கழுவச் சொல்விச்
'சடுதியிலே என்பின்னர் வாரும்' என்று

கண்டேகர் மருத்துமனே அழைத்துச் சென்றாள்!

கனவேக மாய்வந்த இருவர் கண்டு,

பண்டுவந்த நோயாளி முறைத்துப் பார்த்தான்:

பழையநண்பன் மணியெனவும் புரிந்து கொண்டான்.

பெண்டிருமே சந்தித்து விவசம் பேசிப்

பிழைநேர்ந்த காரணங்கள் அறிந்து விட்டார்!

திண்டாட்டம் தீர்ந்துண்மை தெளிந்த தேனும்

சிதறிவிட்ட பற்களுக்குப் பொறுப்பு யாரோ?

40

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனியமுது.pdf/51&oldid=1380243" இலிருந்து மீள்விக்கப்பட்டது