பக்கம்:கனியமுது.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



கல்லூரி விடுதி தன்னில்

கண்ணனும் முருக வேளும்

எல்லாரும் போல அன்றி -

இணைபிரி யாத நண்பர்!

கல்வியில் துறைகள் வேருய்க்

கற்றனர் எனினும், மற்ற

பல்வகை கடப்பும் ஒன்று

படுத்தின; அறையும் ஒன்ரும்!


இருபது வயதை எட்டும்

எழில்மிகு கனவுக் காலம்;

பருவமோ மனித வாழ்வில்

பக்குவம் தோன்றா நேரம்:

ஒருவரின் உடையை மற்றோர்

உடுத்திடல் கண்ட தோழர்

'இருவரும் மனைவி யையும்

மாற்றுவர் என்றும் சொன்னர்!

41

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனியமுது.pdf/52&oldid=1382702" இலிருந்து மீள்விக்கப்பட்டது