பக்கம்:கனியமுது.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆனந்தம் கவிதைகள்


புதுமலர்த் தேனை மாந்தி
மயங்கிடும் வண்டு போலப்,
புதுவாழ்வின் தனிமை இன்பம்
பூரண மாக உண்டு,
மெதுவாக நகர்ந்த நாளை
விரட்டியே, நன்மை தீமை
பொதுவாக்கிக் காணும் ஊரார்
போற்றிடும் நெறியில் நின்றார்.


நீண்டநாள் ஆன பின்னர்
நெருங்கிய நண்பன் கண்ணன்
ஆண்டொரு பணியைப் பெற்றோன்
அவ்வூர்க்கு மாற்ற லாகி
வேண்டிய படுக்கை பெட்டி
மிடுக்குடன் வந்து சேர்ந்தான்
'மீண்டும் நாம் கூடி னோமே;

விந்தையே! எனம கிழ்ந்தார்.

45

45

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனியமுது.pdf/56&oldid=1459286" இலிருந்து மீள்விக்கப்பட்டது