பக்கம்:கனியமுது.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆனந்தம் கவிதைகள்


அன்புவெள்ளம் பெருகிவரும் உள்ள மேனும்
ஆற்றுவெள்ளம் கோடையிலே வறண்டாற் போல--
என்பு நரம் புக்குருதி தசைதோல் சேர்ந்த
இவ்வுடலும் நோய்ப்படுதல் இயல்பே யன்றோ?
அன்புநாதர் காய்ச்சலினால் அவதி யுற்றார் ;
ஐந்தாறு நாளாக எழவே யில்லை!
தன்பேதைக் கமலமுகம் மலரச் செய்யும்
தனிக்கதிரோன் காணாது வாடும் என்றே



மெதுவாகத் துணைநலத்தை அருக ழைத்து
வெண்கூங்கல் கோதிவிட்டுத் தயக்கத்தோடும்,
எதுவரினும் சரி என்ற உறுதி யோடும்,
ஏக்கமுறும் இதயத்தைத் திறந்து காட்டி,
இதுகாறுங் கூறாத செய்தி சொல்லி
இட்டுவர இறைஞ்சுகின்றார் ! ஆயின் அன்னை
“பொதுவாக இதுநமக்குப் பழக்க மில்லை ;
போர்முனையில் உள்ளமகன் வரப்போ கின்றான்.

55

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனியமுது.pdf/66&oldid=1380265" இலிருந்து மீள்விக்கப்பட்டது