பக்கம்:கனியமுது.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கனியமுது


கடிந்துகொள்வான்” என மறுக்க-மகனும் வந்தான் !
கண்களிலே புனல்சிங்தக் கதையைச் சொன்னாள் இடிந்துவிட்டான் ! “ எவளந்த இழிகு லத்தாள்,
என்தந்தை பணம் பறிக்கச் சூழ்ச்சி செய்தாள் ?
முடிந்துவிட்ட நாடகந்தான்! உடனே சென்று
மூதேவித் தொடர்புகளை முறிப்பேன்!” என்றான்.
ஒடிந்துவிழும் உள்ளத்தை நிமிர்த்திக் கொள்ள
உட்கார முயல்கின்ற தந்தை காலில்......


“அய்யோ, என் துரையே!” என் றோடி வீழ்ந்தே
அவிழ்ந்தலையுங் கூந்தலுடன் விழிநீர் ஓட
மெய்சோரப் புலம்புகின்ற கமலம்-தன்னை
மேம்படுத்தித் தான்படுத்த இறைவன் நோக்கிப்
பொய்யோ நம் வாழ்வெல்லாம் ? புனிதங் கெட்டுப்
புன்மொழிகள் கேட்டுயிருந் தரியேன்!” என்றாள்;
மெய்யாக்கி வெற்றுடலைக் கிடத்தி விட்டு,
மேன்மையுடன் உயிர்நீத்து மானங் காத்தாள் !

56

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனியமுது.pdf/67&oldid=1380276" இலிருந்து மீள்விக்கப்பட்டது