பக்கம்:கனியமுது.pdf/68

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


அரிசியிலே கல்பொறுக்கிக் கொண்டிருந்தேன் ;

அடுத்தவீட்டுச் செங்கமலம் உள்ளே வங்தாள், வரிசையான செம்பற்கள் வெளியே தோன்ற

'வாடியம்மா ?" என்றழைத்தேன் வாடிக் கைதான். கரிசனமாய்க் கையிலுள்ள முறத்தை வாங்கிக் “கல்லுக்கும் அரிசிக்கும் வேறு பாடே சரியாகப் புரிவதில்லை இப்போ தெல்லாம் :

சரிதான அக்கா, நான் சொல்வ தென்ருள்.

“ இப்படியே மனிதரிலும் இருக்கின் ருர்கள்

யாரென்பதறிவாயா?" என்று கேட்டேன் ; அப்படியே தலைகவிழ்ந்து நிலத்தை நோக்கி

அங்கமெலாம் குன்றிப்போய்க் குறுகிவிட்டாள். " எப்படி நீ தெருவிலுள்ள வீட்டார்க் கெல்லாம் என்வீட்டில் இருவருக்கும் சண்டை என்று செப்பிவந்தாய்? இவைதாம் நீ எமக்குச் செய்யும்

சிறப்பான உதவிகளோ ? உண்மை என்ன :

57

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனியமுது.pdf/68&oldid=692002" இருந்து மீள்விக்கப்பட்டது