பக்கம்:கனியமுது.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



பரந்தாமன் சீத்தாவை மணம்புரிந்து
    பத்தாண்டு காலத்தைக் கழிப்ப தற்குள்-
வருங்தாத நேரமில்லை ; குலங்த ழைக்க
    வழித்தோன்றல் ஒன்றேனுங் காணோ மென்று !
சிறந்ததெனப் பெரியோர்கள் மொழியைக் கேட்டுச்
    செல்லாக திருத்தலங்கள் எங்கு மில்லை!
“இறந்தாலும் ‘புத்’ என்ற நரகுக் கன்றே
    ஏகிடுவோம்!” என்றஞ்சி நாளும் செத்தான் !


ஏங்காதோ பெண்ணுள்ளம் தாய்மைக் காக ?
    ஏற்றிடுமோ மலடியெனும் இழிந்த சொல்லை ?
தாங்காத துயரத்தை மறைத்த வாறே
    தனிமையிலே தான்பெருக்கும் கண்ணிர் ஒடை !
நீங்காத வாஞ்சையுடன் கணவன் கொண்ட
    நெருக்கத்தில் சிறு பிளவு தோன்றக் கண்டாள்.
தீங்கான பாதையிலே போகான் என்ற
    சிறப்புக்கும் மாசுவர நடக்க லானான் !

59

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனியமுது.pdf/70&oldid=1383228" இலிருந்து மீள்விக்கப்பட்டது