பக்கம்:கனியமுது.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கனியமுது

கொஞ்சி மனம் மகிழுதற்குக் குழந்தையில்லாக்
    குற்றமெலாம் பெண்மீத மட்டுந் தானோ ?
கிஞ்சிற்றும் தன்குறையை எண்ண மாட்டான் !
    கெட்டொழியத் திட்டமொன்று திட்டி விட்டான்
நஞ்சனைய கருத்தளித்தார் சுற்றத் தார்கள்:-
    நல்லதொரு பெண் தேடி மணந்து கொண்டால்
எஞ்சியுள்ள வாழ்நாளில் மகன்பிறப்பான் :
    ஏராள சொத்துக்கும் வாரி சுஆவான் !


மூத்தாளின் சம்மதத்தைப் பெறுவ தற்கு
    முனைந்திட்டான் ! கடிதமொன்றை எழுதிக் கொண்டு
கூத்தாடும் கரங்களொடு, குழறும் வாயால்,
    குனிந்த தலை நிமிராத தோற்றங் காட்டிச்
“சீத்தா ஓர் கையொப்பம்...” என்பதற்குள் :
    சிற்றத்தால் முகஞ்சிவக்கச் சீறி நின்று,
“சாத்தானின் கையாளாய் ஆனிர், அத்தான் !
    சரியான முடிவொன்றை நானே சொல்வேன்:

60

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனியமுது.pdf/71&oldid=1383229" இலிருந்து மீள்விக்கப்பட்டது