பக்கம்:கனியமுது.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது





“அன்றாடம் மாலையிலே வீடு வந்து
    அரைக்கவுளி வெற்றிலையைத் தந்து செல்வான்;
இன்றளவும் ஒரு நாளும் நின்றதில்லை :
    இன்னும் ஏன் வரக்காணோம், அல்லா பிச்சை?
என்றுமிலாப் புதுமையாக நேர்ந்த தென்ன ?
    ஏனப்பா மரியசூசை அறிவா யாநீ ?
சென்று அவனைக் கேட்டிடுவாய்; கிடைக்காவிட்டால்,
    சிறு கடையில் வாங்கிவா!“ என்றேன், போனான்.


வெற்றிலையைப் பக்குவமாய்க் கிள்ளி வந்து,
    வெவ்வேறாய்த் தரம்பிரித்து, வாடிக் கைக்கு
விற்றுவரும் எளிதான வருமா னத்தில்-
    வீட்டுக்குள் இருமனைவி! மாற்றி மாற்றிப்
பெற்றுவிட்ட பிள்ளைகளோ எட்டுப் பேராம் !
    பெற்றோர்க்கும் தள்ளாத முதுமைக் காலம்;
வற்றாத வறுமையன்றி என்ன வாழும் ?
    வாட்டத்தைப் போக்குதற்கு வழிதான் யாது?

62

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனியமுது.pdf/73&oldid=1383232" இலிருந்து மீள்விக்கப்பட்டது