பக்கம்:கனியமுது.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மருத்துவராய்க் கலைப்பட்டம் பெற்ற போதே

வணிகரது மனப்பாங்கும் பெற்றார் போலும்,

விருத்தகிரி! வாயிலின்முன் பலகை மாட்டி,

விளம்பரமாய்க் கட்டணமும் விதித்து விட்டார்!

கருத்தறியக் கால்நூறு; கைபி டித்துக்

கண்ஊசி மருந்தேற்றப் பத்து ரூபாய்:

அறுத்தெறிய முழுநூறு; அங்கே தங்க

அறைக்கூலி அரைநூறு நாளொன் றுக்கே!


நோய்நாடி, கோய்முதலும் நாடித் தேர்ந்து,

நோயாளர் துயருணர்ந்தே, அதுத ணிக்கும்

வாய்நாடி, வாய்ப்பச்செய்ம் முறையே யில்லை!

வந்தவரின் பைநாடி, வரவு நோக்கித்,

தாய்காடு தலைகுனியத் தன்ன லத்தால்

தகைபிறழும் வகைமனிதர் எனினும்; ஆங்கே

போய்நாடி உணவாக மருந்த ருந்தும்

போக்கற்ற மக்களுக்குக் குறைவே யில்லை!

65

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனியமுது.pdf/76&oldid=1380255" இலிருந்து மீள்விக்கப்பட்டது