பக்கம்:கனியமுது.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கனியமுது


கையிருப்புக் கரையுமட்டும் ஊரைச் சுற்றிக்

கரைகாணாக் கலம்போலச் சுற்றி வந்தான் !

மையிருட்டுப் படர்ந்தபின்னே சாலை யோரம்

மரத்தடியில் படுத்திருந்து, விடிந்து பார்த்தான் ..

வையகமே சுழல்வதுபோல் மயக்க முற்றான் :

வைத்திருந்த பொருளொன்றுங் காண வில்லை !

ஐயிரண்டு நாள்வரையில் அலேந்து விட்டான் ;

ஆதரிப்பார் யாருமில்லை ! ஆங்கி ருந்த


சிற்றுணவும் தேநீரும் விற்று வாழும்

சிறுகடையின் வாயிலின்முன் நின்று கொண்டு,

“பற்றுவர(வு) எழுதுகிறேன்: ஐயா, என்னைப்

பணியாளாய்க் கொள்வீரா?" என் று கேட்டான்.

சற்றேனும் எதிர்பார்க்க வில்லை; அங்கே

சமையலறை அலுவலிலே குமரப் பன்தான் !

உற்றுற்றுப் பார்த்தவனும் உள்ளே ஒட,

ஒழியாதவியப்போடு திரும்பி வந்தான் !

70

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனியமுது.pdf/81&oldid=1380290" இலிருந்து மீள்விக்கப்பட்டது