பக்கம்:கனியமுது.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆனந்தம் கவிதைகள்


தடுமாற்றம், ஏமாற்றம், தயக்கம் தோல்வி,

தாங்கவொனக் கொடியபசி, களைப்புச் சோர்வு

கெடுமார்க்கம் போகவில்லை எனக்கேன் துன்பம் ?

கேடுகெட்ட ஆசையில்ை இழந்தேன் எல்லாம்!

சுடுகாடு செல்வதொன்றே மிச்சம் என்றன்

சொக்கம்மாள் முகத்தினிலே விழியேன் !’ என்று

கடும்வாக்காற் சூளுரைத்தான்; மனமா கேட்கும்?

கன்னியப்பன் புலம்பியதை மனேயாள்

கேட்டாள் :


'ஏனத்தான் ! நானிருக்க எதையி ழந்தீர்?

எதற்காக மனக்கவலை? மிகுந்தி ருக்கும்

மானத்தை முதலாக வைப்போம், வாரீர் !

மன்னவன்என் மாமருைம் விட்டுச் சென்ற

தானத்தை-ஒருகாணி நிலத்தை-வைத்துத்

தளராமல் உழைத்திட்டால் வளமே பொங்கும்!

வீணத்தான் நகரத்தின் வெளிக்க வர்ச்சி :

விரைவாக ஊர்செல்வோம்' என்றாள் சென்றார்.

71

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனியமுது.pdf/82&oldid=1380317" இலிருந்து மீள்விக்கப்பட்டது