பக்கம்:கனியமுது.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கனியமுது

கொல்லையிலே நாற்புறமும் வேலி கட்டிக்
    கொத்திவிட்டுக் கேணிநீரை இறைத்துப் பாய்ச்சி
நல்லபசுங் தழைஎருவும் சாணத் தோடு
    நால்வரப்புப் பாத்திகளில் கலந்து வைத்துக்
தொல்லைதரா நிலமடந்தை சிரிக்கு மாறு
    துணையிருவர் தோள்வலியாற் பாடு பட்டார்!
எல்லேயிலா இன்பத்தை உழைப்பில் பெற்றார்,

    எவரிடத்தும் கையிசைதல் இல்லை யன்றோ?


கத்தரி, மா, சுரை, முருங்கை, அவரை, பாகல்,
    கதலிவாழை, தக்காளி, கருணை, சேம்பு,
கொத்துமல்லி, முளைக்கீரை, பசலை, வள்ளி,
    குடமிளகாய், கொத்தவரை, பசுமை கொஞ்சும்
இத்தரையின் புத்துயிராம் விளைவு கண்டார்!
    இல்லாளின் மாட்சிமையால் வறுமை கொன்று,
சத்துணவு விற்பனையில் ஊரார் மெச்சச்

    சலியாத முயற்சியுடன் வாழ்வை வென்றார்!

72

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனியமுது.pdf/83&oldid=1383168" இலிருந்து மீள்விக்கப்பட்டது