பக்கம்:கனியமுது.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆனந்தம் கவிதைகள்

மணம்புரிந்தார், மனங்கலந்தார், வாழ்க்கை யின்ப
      வானத்தில் தேன் சிட்டாய்ப் பறந்து வந்தார்!
குணம்புரிந்து, சினப் பிரிந்து, தினம்மறைந்து
      குடும்பத்தைப் பெருக்கு தற்குத் திட்டமிட்டார்!
பணம் நிறைந்து, தொழில் சிறந்து, மேன்மை எய்தப்
      பத்திநாதன் ஊர் சுற்றல் நிறுத்த வில்லை!
கணம் மறந்தும் கணவனது பிரிவு தாங்காக்
      கவலையினால் என் தங்கை கண்ணீர் சிந்தும்!

அவர் நடித்த நாடகத்தை ஓர் நாள் கண்ட
       அன்பரசி அழுதுகொண்டே வீடு மீண்டாள்!
தவறில்லை என்றாலும், தொழிலுக் காகத்
      தையலரின் தோல் தொட்டு நடித்தல் தீதாம்!
சுவரிடிந்த பாழ் வீடாய்த் தனது வாழ்வுச்
     சுவைமடிந்து போன தாகக் கற்பனையால் —
எவரிடத்தும் சொல்லாமல், கடலில் மூழ்கி

     இறந்துபடத் துணிந்தனளே, என்ன விந்தை!

85

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனியமுது.pdf/96&oldid=1380015" இலிருந்து மீள்விக்கப்பட்டது