பக்கம்:கனியமுது.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கனியமுது

ஓவியமாய், உண்ணாத கனியாய்த் தோன்றி
      ஓயாமல் நகைபுரியும் மழலை, கண்ணீர்க்
காவியமாய் மாறுதற்கோ வழிவ குத்தாள்?
      கணவரிதைக் கேட்டவுடன் பிணம்போ லானார்!
“ஆவியெலாம் நீயென்றே கருதியுள்ளேன்;
      அற்பமான ஐயத்தால் சொற்ப நாளில்,
பாவியெனும் பழிச்சொல்லை ஏற்றி டாதே!
      பார், என்றன் தொழிலையும் நான் விடுப்பேள்!” என்றார்

“பைத்தியந்தான்! நீங்களில்லை; நானே அத்தான் !
      பக்குவமில் லாமனத்தின் குறைதான் ! என் மேல்
வைத்திருக்கும் ஆழமான அன்பின் எல்லை—
      வாழ்வுவேறு, தொழில் வேறாம் என்ற உண்மை
மைத்துனராம் என் அண்ணன் தங்கள் சார்பில்
      வகையாக எடுத்துரைத்தார்; தெளிவு பெற்றேன் !
வைத்தியமே தேவையில்லை!” என்றாள் தங்கை!

      மாப்பிள்ளை மனங்குளிர்ந்தார்; விருந்து தந்தார்!

86

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனியமுது.pdf/97&oldid=1380018" இலிருந்து மீள்விக்கப்பட்டது