பக்கம்:கன்னியாகுமரி அன்னை மாயம்மா.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்மாவைச் சந்தித்தேன். எல்லா நாட்களிலும் பார்வை ஒன்ருகத்தான் இருந்தது. கடல் நீரில் வழுக்கும் சிறிய பாறையில் காலே வைத்து அடுத்த பாறையில் தாண்டுவது ஆச்சரியமான செய்கை 函町G弯r。 அம்மா வெகுநேரம் நீராடிக் கொண்டிருந்தார். நீரில் முழ்குவார். பின் எழுந்து கையில் உள்ள கந்தலைக் கசக்கிப் பிழிவார். அதை நீரில் முக்கிப் பிழிந்து கசக்கிப் பிழிந்து-இந்தச் செய்கையை அலுப்பில்லாமல் பலமுறை செய்து கொண்டிருந்தார் திரு இராஜேந்திரன் பொறுமையாகக் கரையில் தின் ருர். அம்மா கரையில் வந்ததும் அவரது கையில் ஒரு துண்டைக் கொடுத்தார். உடலைத் துடைத்துக் கொண் டார் அம்மா, சீடரும் அதற்கு உதவிஞர். விலை உயர்ந்த பனியனை அம்மாவின் கையில் கொடுத்தார். அம்மா அதைப் போட்டுக் கொண்டார், கெள பீனத்தைக் கொடுத்தார்; கட்டிக் கொண்டார். . அரையில் சிறிய ஆடையையும் கட்டிக் கொண்டார்.

  • **・****秘

ந - ன் கு

            • ------- -мм» в

காலை உணவு ஆரம்பமானது. உணவு கன்னியா குமரியில் உள்ள மீளுட்சி பவன் உணவு விடுதியிலிருந்து வருகிறது. அதற்குரிய செலவைத் துரத்துக்குடித் தொழி லதிபர் திரு. இராஜமாணிக்கமே கொடுக்கிருர், அவர் கன்னியாகுமரி மாயம்மா சமாஜத்தின் தலைவர்; சமாஜ மண்டபத்தைக் கட்டியவர். ஒரு எவர்சில்வர் தட்டில் பச்சரிசிச் சோற்றைப் போட்டு குழம்பை ஊற்றிப் பிசைந்து அம்மாவுக்கு ஊட்டி