பக்கம்:கன்னியாகுமரி அன்னை மாயம்மா.pdf/16

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ஒர் திரு. ராஜேந்திரன். அம்மா தட்டிலிருந்த உணவைக் கை நிறைய வாரி சீடருக்கு ஊட்டினர். அவ்விருவரையும் சுற்றி இருபது நாய்கள் இருந்தன. குட்டிகள், காலொடிந்தவை, சிரங்குடையவை, அருவருப் பானவை-இப்படிப் பல அம்மா நாய்களுக்குச் சோற்றை உருட்டிப் போட்டார். அருகிலிருந்த வாரணுசி யோகி அம்மாவிடம் கையை நீட்டி சோற்றை வாங்கிக் கொண்டார். அம்மாவின் கையில் ஒட்டியிருந்த சோற்றுப் பருக்கையை வழித்து நக்கிக் கொண்டார். இதற்கிடையில் சில பக்தர்கள் பழம், பன் போன்ற உணவுப் பொருட்களே அம்மாவிடம் கொடுத்தனர். அவர், அவற்றை நாய்களுக்குப் போட்டார். மீதியைச் சுற்றி திள் ஹவர்களிடம் கொடுத்தார். அவர்கள் அதைப் பிரசாத மச வாங்கிக் கொண்டனர். அம்மா உண்டு முடிந்ததும் சீடப்பெண் சிவகாமிக் கும் சுவாமிநாதனுக்கும் கொடுத்தார். அம்மாவின் கையையும் வாயையும் கழுவி விட்டார் திரு. ராஜேந்திரன், குடிக்க நீரும் கொடுத்தார். அம்மா பாதி திசைக் குடித்து விட டு மீதியை அவருக்குக் கொடுத் தார். அன்ருடம் நடக்கின்ற நிகழ்ச்சி இது. நான் அம்மர் வோடு தங்கிய நாட்களில் இதைத் திரும்பத் திரும்பக் கண்டேன். இந்தச் செய்கைகள் முடிந்த பிறகு அம்மா தன் குடிலில் போய் இருப்பார். அல்லது கற்பாறையிலேயே படுத்துக் கொள்வார். சுற்றிலும் சீடர்கள் மெளனமாக அமர்த்திருப்பார்கள்.