பக்கம்:கன்னியாகுமரி அன்னை மாயம்மா.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வைத்துக் கொண்டு “ அம்மா சாப்பிடுங்கள்; சாப்பிடுங்கள்" என்று கூறி இறைஞ்சி அவர் கால்களில் விழுகின்ற பக்தர் கள் பெருகி விட்டனர். அம்மா யார்? பூர்விகம் எங்கே? வயது என்ன? அவர் இங்கே என்ன செய்கிருர்? இத்தனை பக்தர்கள் அவருக் குப் பெருகி வருவது எதனுல் இந்தக் கேள்விகளுக்கு விடை காண்டது எளிமையானதல்ல. நதிமூலம் ரிஷிமூலம் காணமுடியாதென்பது பழைய வாக்கு. அம்மா வின் அடித்தொண்டர்களை, அம்மாவோடு தொடர்புடைய வயதான மனிதர்களைச் சந்தித்ததில் எனக்குக் கிடைத்த செய்திகளை மட்டும் இங்கு தொகுத் திருக்கிறேன். அம்மாவின் ஆன்மீக நோக்கைப் புரிந்து, வெளிப் படுத்தக் காலம்தான் துணை நிற்க வேண்டும். ஆ இt "நாற்பது ஆண்டுகளுக்கு முன் வங்காள மாநிலத்தி லிருந்து பயணிகள் சிலர் கன்னியாகுமரிக்கு வந்தனர். அவர்களோடு மாயம்மாவும் வந்தார். வந்த கூட்டம் அவரைத் தனியே விட்டுச் சென்றது. தனியே விடப் பட்ட அப்பெண் ணுக்கு வயது நாற்பது இருக்கும். மொழி, இனம் இவற்றிற்கு அப்பாற்பட்ட இடத்தில் விடப்பட்ட அப்பெண், யாரிடமும் பேசுவதில்லை, எப் போதாவது வங்காள மொழியில் ஓரிரு வார்த்தைகள் சொல்லு , ரன். நல்ல உடல் வாகு கொண்ட அவர் கன்னியாகுமரி பரதவர் குடியில் அடிக்கடி இருந்தார். ஊரில் உள்ளவர்