பக்கம்:கன்னியாகுமரி அன்னை மாயம்மா.pdf/21

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


டமாக இருந்தது. சென்று பார்த்தேன்; 35 அல்லது 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருத்தி ஒரு கந்தலை நீரில் முக்கிப் பிழிந்து கொண்டிருந்தாள். அந்தச் செயலை அவள் தொடர்ச்சியாக, ஆனால் கொஞ்சம் கூடச் சலிப்பில்லாமல் செய்து கொண்டிருந்தாள்.

வருவோரும் பேசவோரும் அச்செயலைச் சில நிமிட நேரம் உற்றுப் பார்த்து விட்டுச் சென்றார்கள்.

அந்தப் பெண் அரையில் மட்டும் ஓர் ஆடையை அணிந்திருந்தாள். அவளுக்கு மாயி என்ற பெயர் இருத்ததாக யாரும் கூறவில்லை.

அவளைப் பார்த்துக் கொண்டிருந்த உள்ளூர்காரர்களில் ஒருவர் "பைத்தியம் என்று கூறியதாகத்தான் ஞாபகம்" என்றார்.

கன்னியாகுமரியைப் பிறந்த ஊராகக் கொண்ட ஒரு பெண் அம்மாவைப் பற்றிக் கூறிய செய்தி இது,

"கன்னியாகுமரியில் பழைய போஸ்ட் ஆபீஸ் பக்கம் ஒரு குப்பை மேடு உண்டு. அதில்தான் அம்மா இருப்பார்.

கையில் ஒரு கந்தலும், கரிச்சட்டியும் இருக்கும், சட்டியில் எப்போதும் கருவாடு இருக்கும். அது பரதவர் குடியில் மாவிடித்ததற்குக் கிடைத்த கூலி.

அவர் குப்பைகளில் நெருப்பை மூட்டி கருவாட்டைச் சுட்டுக் கடித்துத் தின்பதை அடிக்கடி பார்த்திருக்கிறேன். குப்பை மேட்டில் குந்தி இருந்த அந்தக் காட்சி 30 ஆண்டுகளுக்கு முன்பு நான் கண்டது. என் நினைவில் அம்மாவைப் பற்றி பசுமையாகப் படிந்தது இதுதான்" என்று கூறிஞர் அந்த முதிய பெண்.