பக்கம்:கன்னியாகுமரி அன்னை மாயம்மா.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வருடமாக அவரை அறியும் பாக்கியம் எனக்குக் கிடைத்த்து.

கன்னியாகுமரியில் அன்னை மாயியைப் பற்றி எனக்குத் தெரிந்த ஒரு அம்மா (பகவதி அம்மா) விவரங்கள் சொன்னார், அவருடன் அன்னையைத் தரிசிக்கக் கன்னியாகுமரிக்குச் சென்றேன். கடற்கரையில் தென் கோடிப் பாறையில் அம்மா உட்கார்ந்திருந்தார், பகவதி அம்மா பழம்கொடுத்தாள். அதை வாங்கிச் சாப்பிட்டுக் கொண்டே என்னையும் அழைத்து அந்தப் பழத்தைத் தந்தார். நான் அம்மா கொடுத்த பழத்தைச் சாப்பிட்டு விட்டு, பத்து பைசா நாணயத்தை அவரிடம் கொடுத்தேன். அம்மா அதைத் தேய்த்துக் கழுவி சுத்தமாக வைத்துக் கொண்டாள்.

எனக்கு என்னவோ போலிருந்தது. பிறகு தான் புரிந்தது. என் உள்ளத்தில் உள்ள அழுக்கைத் தான் அந்தத் தெய்வம் கழுவி சுத்தமாக்கி இருக்கிறாள் என்று.

ஒருநாள் ஜெயலட்சுமி என்ற சந்யாசினியைச் சந்திக்கும் பாக்கியம் கிடைத்தது. அவர் "மாயம்மாவைச் சாதாரணமானவர் என்று எண்ணி விடாதீர்கள் ? அவர் சாட்சாத் ஈஸ்வரியின் அம்சமாகும் ; தேவிகுமாரியின் சைதன்யம் அம்மாவிடம் இருக்கிறது" என்று கூறினார்.

ஒரு நாள் மாலையில் அம்மாவைப் பார்க்கப் போயிருந்தேன், அம்மா கை நிறையப் பணம் எடுத்து என் முன் நீட்டினார். நான் அழுது விட்டேன். "அம்மா இந்த ரூபாய் எனக்குத் தேவையில்லை; நீ தான் வேண்டும்" என்றேன். அம்மா சிரித்துக் கொண்டே ஆசீர்வாதம் பண்ணினார்.

சரோஜினி அம்பா அந்தக் கட்டுரையில் எழுதியிருப்பது தவிர தன் நினைவில் மாயப்மா பற்றி நின்ற செய்திகளை என்னிடம் கூறினார்.

மாயம்மா அஷ்டமா சித்து அறிந்தவர்; சித்து கை வரப் பெற்று அற்புதங்களைக் காட்டியிருக்கிறார் என்று-