பக்கம்:கன்னியாகுமரி அன்னை மாயம்மா.pdf/29

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


சில சமயம் அலைவீசும் பகுதியில் மிதக்கக் கூடச் செய்வார், அம்மா இப்போது கடலில் நீச்சலடிப்பது இல்லை. மிக அபூர்வமாகப் பாறைகளைத் தாண்டிச் செல்கிருச். கடற்கரையை ஒட்டிய பாறைகளில் தாவி சிறிய கடல் பகுதிக்கு எப்போதாவது போகிரும். முன்பு விவேகானந்த பாறைக்கு நீந்திச் சென்ற துண்டு. அப்போது அங்கு நினைவாலயம் இல்லை. வெறும் பாறையின் பரப்புதான் இருந்தது. அதில் மீனவர்கள் சிறிய மீன்களே உலரப்போட்டிருப்பர். அம்மா நீத்திப்போய் உலர்ந்த மீன்களை அங்கிருந்து எடுத்து வருவதுண்டு. ஒ ன் 11 து அம்மாவின் செய்கைகள் சில அர்த்தமற்றதாகத் தெரி யும். அம்மாவோடு இருக்கின்ற ராஜேந்திரன் ஒரு முறை அதோ அம்மா என்ன செய்கிருர் பாருங்கள் என்று எனக்குக் காட்டிஞர். நான் அம்மாவின் அருகில் சென்றேன், உப்பு நீர் மோதித் தெறிக்கின்ற இரு சிறிய பாறைகளின் இடையே மணலைத் தோண்டிக் கொண்டிருந்தார். சிறிது நேசம் தோண்டியதும் உயிருள்ள நண்டு ஒன்றை எடுத்தார். உடனே அதைக் கடலில் எறிந்து விட்டார். பின்னர் அதே இடத்திலிருந்து சற்றுத் தள்ளி மணலைத் தோண் டிஞர். சற்று நேரம் தோண்டியதும் இசத்த நண்டு ஒன்று அவர் கையில் கிடைத்தது. அதைக் குப்பைகளு டன் போட்டார். குறிப்பிட்ட அந்த இடத்தில் செத்த நண்டு இருப் பது அம்மாவிற்கு எப்படித் தெரிந்தது ? உயிருள் ள நண்டு மணலின் அடியில் இருப்பதை எப்படி அறிந்தார் ?