பக்கம்:கன்னியாகுமரி அன்னை மாயம்மா.pdf/30

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ஆளுல் எல்லா இடங்களையும் தோண்டிப் பார்க்க வில்லை. எல்லா நாட்களிலும் கூட அந்தச் செயலைச் செய்யவில்லே. உயிருள்ள தண்டுக்கு அன்று அம்மாவின் கையால் விமோசனம் கிடைத்தது. செத்த நண்டு கூட தன் பிறப்பை விட்டொழிக்க அம்மாவின் கையில் அகப்பட்டது. جہ ی:چیلیسیم 1 த் து திரு. இராஜமாணிக்கம் மாயம்மாசமாஜத்தின் தலைவர். துரத்துக் குடித் தொழிலதிபர். சிறந்த பக்தர். இந்துமதப் பிரச்சாரத்திற்காகத் தன் சொந்தத் தொழிலைக் கூட இரண்டாம் பட்சமாக எண்ணிச் செயல்படுகிறவர். மாயம்மா சமாஜ மண்டபத்தைச் சுமார் நான்கு லட்ச ரூபாய் செலவில் தன் சொந்த முயற்சியாலே கட்டியிருக்கும் அவர் அம்மாவைச் சந்தித்த நிகழ்ச்சி விந்தையானது. அவர் கூறிய செய்தி இது. 1971-ம் ஆண்டு ஒரு நாள் திருவண்ணுமலை ஞான ஆனந்த சுவாமிகளிடம் பேசிக் கொண்டிருந்தேன். அப் போது என் அருகே விழுப்புரம் ஞான ஒளி ஸ்டுடியோ அதிபர் இருந்தார். ஸ்டுடியோ அதிபர் சுவாமிகளிடம் "சுவாமி நான் கன்னியாகுமரிக்குச் சென்று வந்தேன்; கன்னியம்மனைத் தரிசித்தேன்" என்ருர், சுவாமிகள் அதற்கு "மிக்க மகிழ்ச்சி கன்னியாகுமரி யில் விலை மதிக்க முடியாத மாணிக்கம் ஒன்றைப் பார்த் தாயா ? " என்று கேட்டார்.