பக்கம்:கன்னியாகுமரி அன்னை மாயம்மா.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிருர்களே. இப்போதே வேண்டிய உதவியைச் செய்கி றேன்" என் ருர், உடனேயே அவர் தேவசம் போர்டு செலவில் சிறிய ஒலைக் குடில் ஒன்றைக் கட்டச்செய்தார். இப்போது அம்மன் இருக்கும் ஒலைக் குடிலின் வரலாறு இது. இந்தச் செய்தி யைத் திரு. இராஜமாணிக்கமே என்னிடம் கூறினர். பதினென்று அன்ருடம் குப்பைகளை எரிப்பதை ஒரு கடமையாகச் செய்கிருர் அம்மா. விடாத மழையிருந்தால் மட்டும் அச் செயல் தடைப்படும். தென் ெைடங்கும் புயல் வீசப் போகிறது; கடல் கொந்தளிக்கப் போகிறது என்ற அச்சம் பரவியிருந்த காலத்தில், அம்மா தாம் எப்போதும் இருக்கின்ற இடத்தி லேயே இருந்தார்; தன் கடமையை ஒழுங்காகச் செய்தார். அம்மா இப்படி குப்பைகளை எரிப்பதன் காரணத்தை அவரது சீடர்கள் இப்படிக் கூறுகின்றனர். "அம்மா நடத்துவது வேள் வி. அவ் வேள்வியில் மடிவன பல. அவர் இந்த நாட்டு மக்களுக்காக இந்த வேள்வியைச் செய்கின்ருர், எ ரி யு ம் பொருட்களில் கடைசிப் பகுதி கூட எரிந்த பிறகுதான் அம்மா அந்த இடத்தைவிட்டு அகன்று போவார். காரணம் வேள்வியில் குறைபாடு வந்து விடக்கூடாதே என்றுதான். எரிந்த சாம்பலைக் கரைப்பது உலக மக்களின் பசவத் தைக் கரைப்பது போல. சாம்பலைக் கரைப்பது எப்போ தும் நடக்காது. வேள்வி நடந்த இடத்தைக் கடல் நீரால் சுத்தப் படுத்துவதும் உண்டு.