பக்கம்:கன்னியாகுமரி அன்னை மாயம்மா.pdf/42

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


காது. பிறர் பேசுவதை அது எந்த மொழியாக இருந்தா லும் புரிந்து கொள்ளுவாள். அவளது செய்கை, அதைப் புலப்படுத்தும். திரு. சிவ சுப்பிரமணிய பிள்ளை க்கு நாற்பது வயது இருக்கும் போது அந்தப் பெண் சுசீந்திரத்திலிருந்து கொட்டாரத்திற்கு வ ந் து விட்டாள். (கொட்டாரம், நாகர்கோவில்-கன்னியாகுமரி சாலையில் இருக்கிறது.) கொட்டாரம் பஸ் நிலையத்திலேயே தம் முழு நேரத்தை யும் கழித்தாள். திரு. சிவ சுப்பிரமணிய பிள்ளையும் கொட்டாரத்தைத் தன் வாழ்விடமாகக் கொண்டிருந்ததால் அந்தப் பெண்ணை அடிக்கடி பார்க்கச் செல்வார், அவள் மழையிலும் வெயி லிலும் துன்புறுவது கண்டு கொட்டாரத்தில் இப்போது போஸ்ட் ஆபீஸ் இருக்கின்ற இடத்தின் அருகில் சிறிய ஓலேக் கூரை போட்டுக் கொடுத்தார். அவள், தம் இறு திக் காலம் வரை அந்தக் குடிசையிலேயே வாழ்ந்தாள். அவளுக்கு ஊரில் சீடர்கள் பெருகினர். திரு. சிவ சுப்பிரமணிய பிள்ளை, திரு ஆறுமுகம் பிள்ளை ஆகியோர் அவளுக்கு எந்த நேரத்திலும் உதவி செய்யக் காத்திருந் தனர். ஒரு நாள் கேரள மாநிலத்தில் உள்ள மாவேலிக் கரையிலிருந்து சாமியார் கூட்டம் ஒன்று வந்தது. அவர் களில் பலர் அப்பெண்ணுக்குக் காணிக்கை செலுத்தினர். அக் கூட்டத்திலிருந்த குருசாமிக்கு அ வ ளை த் தெரியும். "அம்மா சுசீந்திரத்திலிருந்து ஏன் இங்கு வந்து விட்டார். என் மனத்தில் தோன்றியதைச் சொல்லுகி றேன். அம்மா வருகிற பெளர்ணமி அன்று சமாதி அடைவார்கள்” என் ருர் அவர். குருசாமி சென்ற மூன் ருவது நாள் அப்பெண் மெலிந்து காணப்பட்டார். கொட்டாரம் ஊரில் உள்ள அரசாங்க மருத்துவர் அப்பெண்ணைப் பரிசோதனை செய்தார்.