பக்கம்:கன்னியாகுமரி அன்னை மாயம்மா.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஊரார் செய்வது அறியாது திகைத்து நின்றனர். அப்போது ஒரு அதிசயம் நிகழ்ந்தது. ஆகாயத்திலிருந்து ஒரு பருந்து கீழே வந்தது ; பூம்பல்லக்கை மும்முறை வலம் வந்தது. குழியில் அமர்ந் தது ; சிறிது நேரம் இருந்து விட்டு மேலே எழும்பிச் சென்றது. அதிகாரி திகைத்தார்; அன்பர்கள் ஆரவாரம் செய்த னர். அம்மா அந்த இடத்தில் சமாதி வைக்கப்பட்டார். இந்த நிகழ்ச்சி நடந்து ஒன்று அல்லது இரண்டு ஆண்டு கழிந்திருக்கும் ; கொல்லத்தில் (கேரள மாநிலம்) தாசில் தாாகப் பணியாற்றும் ஓமனக் குஞ்சம்மா என்ற பெண் கொட்டாரத்துக்கு வந்தார். அவள் இறந்த பெண்ணின் பக்தை. ஓமனக் குஞ்சம்மா ஒரு தாள் கனவு கண்டாள். கனவில் அந்தப் பெண் "எடி ஒமனே! என்னே நினக்கு அறிஞ்துகூடே ; மறந்நு போயோ" என்று கேட்டாள். அதளுலேயே ஒ ம ன க் கு ஞ் ச ம் மா கொட்டாசத்துக்கு வத்தாள். சமாதி எங்கே? என்று ஊராரைக் கேட்டாள்; அவர் கள் புத்தணுறு பக்கம் வழி காட்டினர். சமாதி மழையால் நனையாமலிருக்கக் கீற்றுப் பந்த லிட்டாள். அன்று சமாதிக்குப் பூஜை செய்தார். கஞ்சி வைத்து ஏழைகளுக்குக் கொடுத்தார் அதற்குப் பின் அச்சமாதியை யாருமே கவனிக்க 836 శీ), கொட்டாரத்தில் அப்பெண் சமாதியடைந்து நாற்பது ஆண்டுகள் ஆகிவிட்டன. அவரது ஆன்மா ம | ய ம் ம வி ன் உடலில்தான் இருக்கிறது.