பக்கம்:கன்னியாகுமரி அன்னை மாயம்மா.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உணவுப்பொருட்களை அம்மாவின் முன்னே கொட்டு கின் ருர்கள். அவற்றை அம்மா பிரசாதமாக தங்க்ள் கை களில் கொடுக்க மாட்டாரா என்று ஏங்குகின்ருர்கள். அம்மாவிடம் ஆசீர்வாதம் வாங்க கட்டாயமாகக் காத்திருக் கும் முதியவர்கள் : காலை மட்டும் தொட்டு வணங்கி விட்டு தள்ளி நிற்கும் பெண்கள்; இவர்தான் மாயம்மாவா? இவ் வளவு முதிர்ந்தவரா? என்று ஆச்சரியப்படும் பயணிகள்இவர்களை நாள் தோறும் காண லாம். நான் அம்மாவோடு இருந்த நாட்களில் இக்காட்சிகளைக் கண்டேன். அமைதியாக, நேரம் விட்டு, மூடித் திறக்கும் அம்மன் வின் இமைகள்; அதன் உள்ளே ஒளிரும் விழிகள் அவற் றின் நிர்மலப் பார்வை, நேராக நோக்கி அருள் புரியாத தன்மை ஆகியவைகள் அவருக்கே உரியன. அவரது அருட்பார்வை ஒருபொழுது கூட பணம் பதவி ஆடை ஆபண சம் என்ற தார தம்மியத்திற்காக மாறியது இல்லை; பாரபட்சம் காட்டியது இல்லை. நூலறுந்த பட்டமாக இருந்த அம்மாவிடம், நிலத்தில் இறங்கி வந்து அருட்பார்வை பார்க்கும் அம்மாவிடம் தம் ஸ்பரிசத்தால் பிறர் துன்பத்தைப் போக்கும் அம்மாவிடம் எப்போதும் எதிலும் ஏற்ற தாழ்வு இல்லை. சித்து கைவரப் பெற்ற புருஷர்கள், அந்தஸ்து உள் னவர்களுக்கு அரசியல்வாதிகளுக்கு அந்தரங்கப் பேட்டி அளித்து அருள் நல்கும் வரலாறு இந்த நூற்ருண்டில் நடந்து கொண்டிருப்பது தமக்குத் தெரியும், அம்மா அவருக்காகக் கட்டப்பட்ட அழகியசமாஜத்தை : நாடிப் போகவில்லை. வெட்ட வெளியே பரமென்று இருப் பார்க்குப் பட்டயம் எதற்கு என உணர்ந்தவர் அவர். அம்மாவின் வாழ்வு முடிந்ததல்ல ; அவரது ஆன்மா ஒரு தொடர்கதை ; காலம் தான் அதன் வளர்ச்சியைக் காட்ட முடியும்.