பக்கம்:கன்னியாகுமரி அன்னை மாயம்மா.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ம யி ம | ண் பு LisāLi ol & Głó6; M.A., M.Litt, Ph.d கடவுளைக் கண்டாலும் கண்டுவிடலாம்; மனிதர் களின்-சாதாரண மனிதர்களின்-மனக் கருத்தைக் கூட ரியாகக் கண்டுக்கொள்ள முடியாது போலிருக்கிறது : இந்நிலையில் அசாதாரண மனிதர்களின் - சித்தர்களின் மன இயல்பை எவ்வாறு கண்டுகொள்ள இயலும் ? எனவே அறிவியல் உலகில் சில அருட்பொருட்களைப் புரட்டிப் புரட்டிப் பார்த்து-இழைத்து இழைத்து எண்ணி- சில கருத்துக்களை படி நிலையில் படைத்து அவை செப்படிக் கருத்துகளா? அல்லது செம்படிக் கருத்துகளா என்று ஒயாமல் துருவித்துருவி ஆராய வேண்டியுள்ளது. ஆம்: ஓயாமல் ஆய்வதே ஆய்வில் ஒயாமல் இருப்பதே-அறிவு அலையின் நிலையில்லா நிலை: அண்மையில் தமிழகப் புலவர் குழுவின் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நாகர்கோவில் சென் றிருந்தேன். அதுபோது கன்னியாகுமரிக்குச் சில நோன்புகளுடன் போய் அங்குள்ள மாயி என்றும் ஜிவன் முக்தர் என்றும் போற்றப்படும் அருளாளரைக் கண்டு கள்க முயன்றேன். அது பற்றிய சில குறிப்புகளைக் கொடுப்பதே இக்கட்டுரை யின் நோக்கம் நான் சென்ற நாள் அமாவாசை நாளாகவும் மறுநாள் நவராத்திரி நாளாகவும் இருந்தது. வைதிக வழியில் நம்பப்படும் இந்த தாளின் சிறப்பையும் நாளும் நினைந்தே கன்னியாகுமரிக்குச் சென்றேன். அன்று வெள்ளிக் கிழமையாகவும் இருந்தது. பாமர மக்களிடத்தும் அக் கிழமை பற்றியிருக்கும் பக்தி என் உள்ளத்தில் என்னையும் மீறி பாய்ந்து கொண்டிருந்தது! அண்மைக் காலத்தில்