பக்கம்:கன்னியாகுமரி அன்னை மாயம்மா.pdf/56

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


- 3 - களையும் தோசைகளையும் கையில் வழிய வழிய வாங்கிக் கொண்டே வெளியில் வந்து நாய்களுக்குப் போட்டார். ஒருமுறை போட்டுவிட்டு மறுமுறையும் அதே கடைக்குள் திரும்பினர். அவர்களைப் பின்பற்றிக் கொண்டிருந்த நான் என் கையிலிருந்த வடைகள் பொட்டலத்தை 'மாயி, என்று சொல்லி கொடுத்தேன். யாரது, என்று கேட்டது போல் என்னை உற்றுப் பார்த்துவிட்டுப் பொட்டலத்தில் இருந் ததைக் கூடவந்த தொண்டர் இராசேந்திரன் கையிலும் நாய்களின் வாயிலுமாகப் போட்டார் மாயி. சில மாதங்கட்கு முன்பு நானும் மனைவியுமாக மாயியைப் பார்த்தோம். அப்போது அவர்களைச் சுற்றி பட்டிகள் தான் இருந்தனவே தவிர மாடு எதுவும் இல்லை. இந்த முறை ஒரு மாடும் அவர்களுடன் வந்துகொண்டிருந்தது! எனவே நாய்களும் மாடும் மாயி கொடுப்பதை மண்டுவதில் போட்டி போட்டுக் கொண்டன. ஆம், மாயியின் சன்னதியில் புத்த ஜாதகக் கதைகளில் புகலப்படுவது போலப் புல்வாயும், புலிவாயும் ஒன்றுபட்டு இருக்கும் அற்புதக் காட்சியைக் காணும்பேறு இந்த கண்களுக்கு எப்போது கிடைக்குமோ? ஓர் அரைமணி நேரத்தில் நான் கைந்து கடைகளில் ஏறி இறங்கி மாயி உரிமையுடன் மதிப்புடன் உ ண வு ப் பொருட்களை வாங்குவதும் விலங்குயிர்கட்கு வழங்குவதுமாக இருந்தார்கள் கடைகள் சிலவற்றில் தாமே வாழைக் குலைகளிலிருந்து பழங்களைப் பறித்துப் போட்டார்கள். ஒரிரு வெற்றிலைப் பாக்குக் கடைகளில் அதன் உரிமை யாளர்களே மாயியைக் கண்டதும் புகையிலைகளைக் கை நிறைய எடுத்துக் கொடுத்தார்கள். அதை மட்டும் அவ்வப்போது மாயி பத்திரமாக வாங்கி உடன் வந்த இரா சேந்திரனிடம் கொடுத்து வந்தார்கள், இந்த வசூல் 'பயணத்தில் ஒரு கடையில் ஒரு பையன் யூரிகளே மாயி கையில் கொடுப்பது போல் நான் கைந்து முறை பாசாங்கு செய்ததை மாயி மிகச் சாதாரணமாக எடுத்துக் கொண்டது எனக்கு அச்சம் கலந்த வியப்பைத் தந்தது வியப்பும் பழகிப் போனல் விளையாட்டு ஆகிவிடுமோ ?