பக்கம்:கன்னியாகுமரி அன்னை மாயம்மா.pdf/59

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


șæł 5 - களை அளக்க முடியுமா? நாழி கொண்டு ஆழியை அளக்க முடியாது. ஆளுல் நம் தலையை மட்டும் கூடவா நனைக்க முடியாது? எனக்கு விளங்குவது எல்லாம் ஆன்மீக சோதனை கள் செய்கிறவர்கள்-அதற்காகச் சாதனைகள் செய்கிறவர் கள் முதலில் முனைவதெல்லாம் உடலையும் பொருளையும் உலகையும் வெறுத்து ஒதுக்குவதுதான். இதல்ை-பல வற்றை ஒதுக்குவதால்-ஒன்றை மட்டும் உறுதியாகக் காண முடியும். இது சாதாரணர் வாழ்க்கையிலும் தமக்கு அனுபவம்தானே எட்ட உள்ள ஒரு பொருளைக் காண நினைத்தாலோ-ஏன் இதயத்தின் துடிப்பைக்கேட்க நினைத் தாலோ-நாம் கேட்க காண விழையும் பொருட்களைத் தவிர மற்ற பொருள்களை எல்லாம் கவனிக்காமல் புறக்கணித் தலே ஒரே வழியாகின்றது அன்ருே ? இந்த அடிப்படை யைப் பின் பற்றித்தான் ஆத்ம சோதனைகள் செய்கிறவர் கள் அனைவரும் கூடிய மட்டும் கும்பல் சேராமல்-குப்பை கள் சேராமல் ஒதுக்கித் தள்ளிவிடுகிருர்கள் போலும் ! ஆயினும் ஒன்றிசண்டை மட்டும் பற்றிக் கொண்டிருப் பதற்கு என்ன காரணம்? வேறுபாடற்ற நிலையைக் காண வும் காட்டவும் பார்க்கவும் விலங்குகளிடமும் பேரன் பு செய்கிருர்களோ ? தனக் குத் தொண்டு செய்யும் தொண் டரிடமும் தனியன் பு காட்டுகிருர்களோ? கட்டை போல் திட்டையில் கிடக்கும் ஞானிகளைப் பற்றியும் நாம் கேள் விப் பட்டிருக்கிருேம் அவர்களுக்கும் இரமணர்-ஞான நந்தர்-கசவனம்பட்டி சுவாமிகள்-ஒட்டன் சத்திரத்துப் பெரியவர்-பூண்டிமகான்-புரவிப்பாளையம் மாயி போன்ற வர்கட்கும் இடையே எவ்வளவோ வேறுபாடுகள் இருக்கக் காரணம் யாது ? வேறுபட்ட மணிகளைக் கோக்கும் பொற் சரடு போல் ஒர் ஒருமைப்பாடு ஒளிர்வதும் உண்மை யன் ருே! -