பக்கம்:கன்னியாகுமரி அன்னை மாயம்மா.pdf/6

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பதிப்பாளரின் குறிப்பு சித்த புருஷர்களின் வாழ்வு எந்தக் காலத்திலும் சரி யாகத் தொகுக்கப்படவில்லை. தமிழ்ச் சித்தர்களின் வாழ்வு கூட முழுக்கவும் கற்பனை கலந்துதான் காணப்படுகிறது. ஏன் அண்மையில் வாழ்ந்த இசாமலிங்க அடிகளேப் பற்றிக் கூட எத்தனை கற்பனைக் கதைகள் காணப்படுகின்றன. நம்மவர்களுக்கு எப்போதும் சமகால வரலாற்றை எழுதி வைக்க வேண்டுமென்ற ஆர்வமில்லாததுதான் அதற்குக் காரணம் வசதி குறைந்த அந்தக் காலத்துக்கு அந்தக் காரணம் சரி, இப்போது வேண்டாம். பேராசிரியர் த ச ஞ் சீ வி என்னிடம் இப்போது வாழ்கின் த தமிழ் நாட்டுச் சி த் த ர் க ளி ன் வாழ்வைத் தொகுத்து நூலாக வெளியிட்டால் சித்தர் பாடல்களின் ஆய்வுக்குப் பயனுடையதாக இருக்கும் என்ருர்கள், அந்த முயற்சியின் முதல் படிதான் 'அன்னை மாயம்மா’’ என்ற இச்சிறு நூல். இந்நூலைத் தொடர்ந்து. குமரி மாவட்டத்தில் வாழ்ந்த சித்தர்களின் வாழ்வையும் நூலாக வெளியிட ஆசை உண்டு இறைவன் அதற்குத் துணை நிற்பசன் என் த நம்பிக்கை உண்டு. இந்து லில் முரண்பாடான கருத்துக்கள் இருந்தால் எழுதுங்கள்; மறு பதிப்பில் திருத்தி வெளியிடு கிருேம். இவண் சு. மணிந்திரன் உரிமையாளர் சத் னு அச்சகம், நாகர்கோவில்.