பக்கம்:கன்னியாகுமரி அன்னை மாயம்மா.pdf/61

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


- 8 - கொண்டார்கள். மாயி, அவர்கள் ஒவ்வொருவரையும் அரைப் பார்வையும், முழுப் பார்வையுமாகப் பார்த்து போய் வறேன், என்று தானும் எதிரொலிப்பது போல் எதிரொ லித்து மெய்ப் பாடின்றி உட்கார்ந்திருந்தார்கள். நானும் பேசாமல் உட்கார்ந்திருந்தேன். மனதிற்குள் அப்போது சென்னையில் இருந்த சிறந்த யோகினியாகிய திருமதி ரேவதி அம்மாள் அவர்கள் நினைப்பு மட்டும் அடிக்கடி வந்தது. காரணம், அவர்கள் மாயியைப் பார்க்கும் போது தன் பெயரை உச்சரிக்குமாறு கூறியிருந்தார்கள். அத்து டன் அவர்கள் இப்போதெல்லாம் மாயி எப்போதும் பெரு நெருப்பு ஒன்றை மூட்டிக் கொண்டே இருக்கிருர்கள் ! பார் என்பார்கள் ! நானே மிகவும் பயந்த நிலையில்உரக்கப் பேசிளுல் மாயி என்ன நினைப்பார்களோ என்று அஞ்சிய சூழ்நிலையில் மனதிற்குள் மட்டும் ரேவதி அம்மாளே நினைத்துக் கொண்டேன். ஏறத்தாள அரை மணி நேரம் மாயியும் நானும் பக்கத்தில் பக்கத்தில் பேசா மல் உட்கார்ந்து கொண்டிருந்தோம். நான் மாயி அவர் களே வைத்த கண் வங்காமல் விழித்துப் பார்த்த வண்ணம் இருந்தேன். மாயியோ குழந்தை போல எதிரே வெறிச் சிட்டுப் பார்த்துக்கொண்டு பேசாமல் உட்கார்ந்திருந்தார் கள். ஒரிரு முறை மட்டும் ஏதோ நினைவு வந்தவர்கள் போல் என்னைப் பார்த்து பு ன் மு று வ ல் பூத்தார்கள். அதன் பொருள் ஒன்றுமே எனக்கு விளங்கவில்லை. அப் புன்முறுவலைப் பார்த்த எனக்குத் தமிழ் நாட்டில் பல கேசட்டைகளிலும், கோவில்களிலும் இ ங் கு ப் புதையல் இருக்கிறதாம்; ஆளுல் இன்னும் யாரும் கண்டு பிடிக்கவில்லை’ என்று மக்கள் சொல்லும் மரபுச் சொல் தான் நினைவுக்கு வரும் ! அரைமணிநேர அளவு கழித்து திரு. இராசேந்திரன் வந்தார். அதற்குள் அழகான பிராமண இளைஞர்கள் மூவர் அந்தச் சிற்றுண்டி விடுதியில் வந்து சாப்பிட்டனர். அவர்களுள் ஒருவர் உள்ளூர்க்காரர் போலத் தெரிந்தது ! எப்படியோ மாயியின் அருமை பெருமைகளை நன்ருக அறிந்