பக்கம்:கன்னியாகுமரி அன்னை மாயம்மா.pdf/63

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


-10 குட்டுத் தேவர் திருவுருவினர்டஎல்லோருக்கும் வலிய வலிய உற்சாகத்தோடும் பலகாரங்களைச் சுடச்சுட சாப்பி டுங்கள்' என்று வியாபாரம் செய்து கொண்டிருந்தார். முத லில் அவர் மாயியைக் கவனிக்கவில்லை. அப்புறம் கடைசியாக மாயி எழுந்து புறப்பட்டபோது தான் பார்த்தார். அதுவரையில்-மாயிக்குப் பலகாரம் வைத்த போது கூட அவர் மாயியைக் கவனிக்கவில்லை. அவ்வளவு கவனம் அவருக்கு வியாபாரத்தில் அப்புறமும் கூட மாயி எழுந்த போது அடியேனும் திரு. இராசேந்திர னும் உடன் எழுந்த போதுதான்-அந்தச் சூழல் காரண மாகத் தான் போலும்-அவர் மாயியை உற்றுப் பார்த்தார். 'ஆ மாயி என்ற அதிர்ச்சியோடு. எதைப் பற்றியும் எதிர்ப்பாடு (Reaction) செய்யாத நிலையிலிருந்த மாயி, அதை பற்றியும் ஒன்றும் அலட்டிக் கொள்ளாமல் அடி மேலடி வைத்துத் தான் வந்த வழியே திரும்பிஞர்கள். பலகாரக் கடையிலிருந்து இறங்கியதும் நேரேதெரிந்த ஒரு மதிற்கவர் ஒரமாகப் போய் சிறுநீர் கழித்தார்கள். அப்புறம் கொஞ்ச துாரம் நடந்து சென்று ஒரு குழாயில் சுத்தமாகக் கைகால் கழுவிஞர்கள். அ த ற் க ப் பு ற மும் கோயில் வழியாகத் தன் குடிசைக்குச் செல்லும் பாதையில் ஒரு கடையில் தொங்கிக் கொண்டிருந்த வாழைக் குலேயில் நான்கைந்து பழங்களைப் பிய்த்து இராசேந்திரனிடம் கொடுத்தார்கள். இன்னும் ஓரிரு ஓட்டல்களில் பலகாரங் களே வாங்கி அங்கே நின்று கொண்டிருந்த மாடுகளுக்கு ஊட்டிஞர்கள் ; நாய்களுக்கும் போட்டார்கள் . இந்நிகழ்ச்சிகளே யெல்லாம் முடித்துக் கொண்டு மாயி கோயிலுக்குள் துழையும் நிலையில் கன் னியாகுமரி அம்மனே மாறு வடிவத்தில் வந்தது போல் ஒரு கறுப்பு பிராமண இளைஞர் கோயிலுக்குள்ளிருந்து வெகுவேகமாக வெளியே வந்தார். அவர் மாயியைக் கண்டதும் மிக இயல்பாகத் தலை தாழ்த்தினர். மாயியும் தனது கையை தலைமேல்