பக்கம்:கன்னியாகுமரி அன்னை மாயம்மா.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- f2– கள்வளுே? கடவுள் தாகுே? ஒன்றும் புரியாத நிலையில் துணிவை வரவழைத்துக் கொண்டு "எனக்கென்ன பயம். நான் அம்மாவிடத்தில் தானே போகிறேன்? "என்றேன். இதற்கு மறுமொழியாக அந்த "மாயக்" (?!) கு ர ல் சொல்லிய சொற்கள் நான் இப்பொழுது நினைத்தாலும் என்னைமருளச்செய்கிறன. அந்தக் குரல் சொல்லியது: "அங்கே இருப்பதும் இங்கே இருப்பது தானே!" சித்தர் மறை மொழி போலவே இருக்கும் இந்தச்சொற்கள் என் உடம்பில் ஒருமின்சார அலையை பாய்ச்சியது. திரும்பிப் பார்க்காமல் நேரே மேற்கு நோக்கிப் போய் கோயிலின் மேற்குப் பிரகாரத்தில் திரும்பி வடக்கு வாசற் படியில் இடப்புறமாக மூடியிருந்த ஒரு கடையின் முன் பலகையில் துரங்கியும் தூங்காமலும் படுத்துக் கொண்டே இரவைப் போக்கினேன். என் எதிரே ஒரு மலையாளத்துக்குடும்பம் படுத்துக் கொண்டும் கத்திக்கொண்டும் கிடந்தது அவர்களுக்கு எதிரே ஒரு வடஇந்தியப் பெண்மணி பயபக்தியோடு தியா னம் செய்து விட்டுப் படுத்துக் கொண்டார்கள். எப்படி யோ இரவுகழிந்தது. துங்குவதும் விழிப்பதுமாக இருந்த யான் விடியற்காலையில் பேச்சரவம் முதலியன கேட்டு விழித்து எழுந்து உட்கார்ந்து கொண்டேன் எதிாேயிருந்த வடநாட்டுப் பெண்மணி எழுந்து உட் கார்ந்து தியானம் செய்தார்கள்; பின்னர் இருக்கையை விட்டு எழுந்து நான்கு திசைகளை யும் பார்த்து வணங்கி விட்டுத் தான் படுத்திருந்த இடத்தையும் .ெ த ட் டு த் தொட்டுக் கும்பிட்டார்கள். இது எனக்குப் புதுமையாக வும் புதிராகவும் இருந்தது. ஒரிரு வினுடிகளில் இது பற்றிய கருத்து ஒன்று என் உள் ளத்தில் ஒளி வீசியது: உறங்கும் போதும்) தன் பால் அன்பால் குடியிருந்து காப்பாற்றிய கடவுளைக் கும் பிடும் கொள்கைகுனம்!