பக்கம்:கன்பூசியஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

9


இந்த தத்துவ நெறிகளைச் சுமார் 2300 ஆண்டுகளுக்கு முன்பாக, கன்பூசியஸ் என்ற ஞானி பழமைப் பண்புகளுக்குப் புதுமை நெறிகளை வகுத்து ஒரு கொள்கையை உருவாக்கி அமைத்துக் காட்டிய ஒரே சமுதாயம் ஒரே உலகம், ஒரே பொது நெறி ஒழுக்கம் தான் இன்றும் மக்கள் கூறிக் கொண்டிருக்கும் கன்பூசியனிசம் என்ற ஒரு தத்துவமாகும்.

இந்த இலட்சியத்தை விளக்கிக் கன்பூசியஸ் மக்களிடையே பேசும்போது, அதற்குரிய உருவ நெறிகளையும் சுட்டிக் காட்டினார். அவற்றுள் சில:

"நீங்கள் எதை விரும்ப மறுக்கிறீர்களோ, அதைப் பிறருக்குச் செய்ய நினைக்காதீர்கள்! என்றார்!.

அறிவை நான்கு வகைகளாகப் பகுத்தார்! இயற்கையிலேயே நல்லறிவு உள்ளவர்கள் மக்களில் முதல் வகை; கற்றக் கல்வியின் மூலம் அறிவு பெற்றவர்கள் இரண்டாம் வகை; உழைப்பினால் கல்வியைச் சேகரித்துக் கொண்டவர் மூன்றாம் தரத்தினர்; கல்வியில் மந்தமாக இருந்து கற்க முடியாதவர்கள் நான்காம் பிரிவினர் என்றார்.

நியாயத் தீர்ப்பு பெறும் சம்பவங்களில் நான் பிறரைப் போலவே இருக்கிறேன். ஆனால், நியாயத் தீர்ப்பு அளிக்காமல் இருக்கும் சம்பவங்களையே நான் பெரிதும் விரும்புகிறேன். ஏன் தெரியுமா?

தவறு செய்தவர்கள் தங்கள் தவறை மறக்க உதவும் வழிகளை மேற்கொள்ளவே மாட்டார்கள். இவர்கள் நீதிக்குரிய மரியாதையை வழங்கவும் முற்படுவார்கள்; இது தான் நாம் அறிவு வெறும் முயற்சி என்றார்!

அவ்வாறானால், அறிவாளர்கள் என்பவர்கள் யார் என்பதை அவர் அடையாளம் காட்டும்போது, அறிவாளிகள் தனக்கு வருகின்ற இடையூறுகளைப் புறம் காண்பதி

க-1