பக்கம்:கன்பூசியஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

11


நாட்டை ஆளும் மன்னன் எப்படிப்பட்டவனாக இருக்க வேண்டும் என்றால், 'அவன் தன் நல்ல ஒழுக்கத்தால் ஆட்சி செலுத்தும்போது துருவ நட்சத்திரம் போல் விளங்குகிறான். அந்த விண்மீன் சலனமற்று, நடுநிலையிலிருக்க, மற்ற நட்சத்திரங்கள் எல்லாம் அதனைச் சுற்றிச் சுற்றி வருகின்றன.

மன்னனாக இருப்பது கஷ்டம்தான்; ஆனால் அமைச்சனாக இருப்பதும் கஷ்டந்தான்! ஏன் இந்தக் கஷ்டம் உருவாகின்றது என்றால், அரசன் தானே, நீதி ஒழுக்கத்தைப் பின்பற்றுபனாக இருக்க வேண்டும். அப்போதுதான் அவன் கீழ் வாழும் மக்களும் அவன் ஏவுதல் ஏதும் இல்லாமலேயே அவனுடைய கட்டளைக்கு அடங்கி நடப்பார்கள்!

அந்த அரசன் நீதி ஒழுக்கம் தவறி நடக்கும் போது, அவன் எவ்வளவுதான் மக்களைச் சட்டத்தின் மூலம் வற்புறுத்தினாலும்கூட, அந்தச் சட்டங்கள் அவமானப்படத் தானே செய்யும்? இந்த அரசன் நிலை, இன்றைய மக்களாட்சிக்கும் பொருந்தும் அல்லவா? அதனால்தான் மன்னனாக இருப்பதும் கஷ்டம்; அவனுக்கு அமைச்சனாக இருப்பதும் கஷ்டமாகும்-இல்லையா?

அப்படியானால் அந்த அரசன் நடத்துகின்ற ஆட்சி எப்படி இருக்க வேண்டும் என்பதை விளக்குகின்ற ஞானி கன்பூசியஸ், கீழ்கண்ட விளக்கத்தைக் கூறுகிறார், அதாவது, 'நேர்மையானவர்களை அரசன் மேனிலைக்குக் கொண்டுவர வேண்டும். மனக்குற்றம் உள்ளவர்களை ஆட்சியை விட்டு அல்லது அவர்களது பதவியை விட்டு அகற்றிவிட வேண்டும். இப்படி ஓர் அரசன் நடவடிக்கை எடுப்பானானால், மக்கள் அந்த ஆட்சிக்கு அன்புடன் பணிந்து நடப்பார்கள். அதே போல அடுத்துள்ளவர்களை மகிழ்விப்பார்கள். தூரத்தில் உள்ளவர்களை ஈர்த்துக்