பக்கம்:கன்பூசியஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

கன்பூசியஸின்

கவர்வதும், வசீகரிப்பதும் நல்ல ஆட்சி நீடிப்பதற்குரிய சிறந்த இலக்கணமாகும்; என்கிறார்.

மக்களின் நேர்மையான ஒழுக்க வளர்ச்சிகளுக்கு அரசு எந்தக் காலத்திலும் அலட்சியமாக, அக்கரையற்ற விதமாக இருக்கக் கூடாது.

ஒருவேளை அந்த மன்னன் அலட்சியமாகவும், அக்கரையற்றும் இருந்துவிட்டு, சட்டங்கள் மூலமாகவும்; தண்டனைகளைத் தருவதன் வாயிலாகவும், மக்களை அடக்க முயன்றால்; அவர்கள் அவற்றை மீறுவதில்தான் அதிக அக்கரை காட்டுவார்கள்; தண்டனைகளையும் அலட்சியம் செய்வார்கள்!

மக்கள்-மன சாட்சியின் கட்டளைக்குக்கூட கீழ் படிய மாட்டார்கள். இவை எல்லாம் நடக்கக் கூடாது என்று ஓர் ஆட்சி நினைக்குமானால், அரசுப் பொறுப்பிலே உள்ளவர்கள் தங்கள் ஆளுகையின் மூலமாகவும், ஒழுங்கு, ஒழுக்கம் முறைகளின்படியும் மக்களை வரம்புக்குள் கட்டுப்படுத்தி, நீதியின் வழியே நல்வழிப்படுத்தினால் ஓர் ஆட்சிக்குட்பட்ட மக்கள் தங்களது மனச்சாட்சிக்கு அடங்கியும், பயந்தும், மதிப்புடனும், மரியாதையுடனும், வாழ்வார்கள் என்பதுதான் உண்மை.

அதுசரி, ஓர் ஆட்சியை நிர்வகிக்கும் சட்டம், அதிகாரம் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் நீதி போதகர் கன்பூசியஸ் விளக்குவதைப் பாருங்கள்.

ஓர் ஆட்சியின் சட்டம், ஆணை, கட்டளை உத்தரவு மக்களுக்கு உகந்தவாறில்லாமல், தவறானதாக அமைந்தால், மகன் தந்தையையும், அமைச்சன் மன்னனையும் எள்ளளவு முனையும் அஞ்சாமல், தயங்காமல் எதிர்த்துப் போராடலாம் என்று அவரே கூறுகிறார்!

"கல்விக் கோட்டங்களிலே மக்களுக்குக் கல்வியைப் போதிக்கும் ஓர் ஆசான் எவ்வாறு இருக்கவேண்டும் என்