பக்கம்:கன்பூசியஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

13

பதை அவர் பேசும் போது, 'ஆசிரியன் ஒருவன் தான் படித்ததை மறவாமல் இருக்க வேண்டும். அது மட்டுமல்ல; தனது அறிவை மென்மேலும் வளர்த்துக் கொள்ள மேலும் சகல விஷயங்களையும் கல்வி மூலமாகவும், அனுபவம் சார்பாகவும் கற்றுக் கொண்டே வரவேண்டும். இதுதான் ஓர் ஆசிரியனுக்குரிய அடிப்படை இலக்கணம். அதை விடுத்து, மற்றவர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் கூற மட்டும் தெரிந்து கொண்டிருந்தால் போதாது, பல விஷயங்களையும் கற்றுத் தனது நினைவில் வைத்துக் கொண்டிருப்பவன் ஆசிரியன் என்ற பொருளுக்கே உரியவன் அல்லன் என்கிறார்.

கல்வி என்றால் என்ன? அது எவ்வாறு இருக்க வேண்டும் என்பது பற்றி அவர் கருத்தறிவித்தபோது: "இலக்கியக் கல்வியில் நான் பிறரைப் போல சிறந்து விளங்குகிறேன். ஆனால், நான் கற்றக் கல்விக்கு ஏற்றவாறு வாழ்ந்து, சான்றோன் ஆவதில் வெற்றி அடைந்திருக்கிறேனா என்பதில் நான் கேள்விக்குறியாகவே இருக்கிறேன்." என்று தன்நிலையைச் சுட்டிக் காட்டியே மற்றவர்களுக்கும் அவர் அறிவுறுத்தியுள்ளார்!

கல்வி எந்த நாட்டிலும் செய்யுளாகவே துவங்குகின்றது. அதுதக்கநல்லொழுக்கத்தினால் வலுப்பெறுகிறது; வளமாகிறது; அதற்கு நாம் தரும் உரத்தால் ஊட்டமடைகின்றது; வளர்ச்சியடைகின்றது.

எதையும் சிந்திக்காமல் படிக்கும்போது மனதில் குழப்பம் தோன்றுகிறது; அதே நேரத்தில் படிக்காமல் சிந்திப்பது சமநிலையைக் கெடுத்துவிடுகின்றது

கற்ற கல்வியை நினைவாற்றலுடன் போற்ற வேன்டும்; அப்போதுதான் யார் கேட்கும் கேள்விக்கும், உடனுக்குடன் விடைகூறி விளக்க முடியும். ஆனால், அவன் சிறந்த ஓர் ஆசிரியனாக இயங்க முடியாது!