பக்கம்:கன்பூசியஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

4

கன்பூசியஸின்


மாணவர்கள் முன்காலத்தில் தனக்காகவே, அறிவை வளர்த்துக் கொள்ள கல்வியைக் கற்றார்கள். ஆனால், இக்காலத்திலுள்ளவர்கள் மற்றவர்களுக்காக தமது கல்வியைக் கற்கிறார்கள்!

கல்வி கற்றவர்கள் பிறர் கருத்துக்களைத் தெரிந்து கொள்வது நல்லது; நாம் நினைத்ததுதான் சரி என்று முடிவெடுத்துக் கொள்ளக் கூடாது; எந்தக் கருத்தை எவர் கூறினாலும், அதை எண்ணிப் பார்த்து எது நல்லது என்பதையே ஏற்றுக் கொள்ளல் நல்ல்து.

"உணவும், உறக்கமும் இல்லாமல் நான், அல்லும் பகலும் கற்க வேண்டியதைக் கற்றேன். ஆனால், நான் காணவேண்டிய, சுற்றுத் தெளிய வேண்டிய முடிவைக் காணமுடியாததால், மீண்டும் அதை எவ்வாறு பெறமுடியும் என்ற முயற்சியிலேயே இரவும் பகலும் ஈடுபட்டு வருகின்றேன்"

அப்படியானால், நான் எனது கடமையிலிருந்து தவறி விட்டேனா என்று கேட்காதீர்கள். கடமை, என்பது மனித இனம் முழுமையும் கடைப்பிடிக்க வேண்டிய ஒரு நேர்மையான பாதை என்பதை ஒன்றாக உணர்ந்தவனே நான் அப்படி இருக்கும் போது தவறு செய்வேனா?

எங்கே உண்மையைக் காண்கிறோமோ அங்கே அதைப் பாராட்டுவதும் அதை முழுமையாகக் கண்டறிவதையே தொடர்ந்து முயல்வதும், எனக்குத் தெரிந்தவற்றை பிறருக்கு எடுத்து விளக்குவதுமே என்னுடைய கடமையின் இயல்பு என்ற உணர்வுடையவன் நான்.

மக்களின், மாணவர்களின் ஒழுக்கங்களைப் பற்றிக் கவனிப்பது, அரசனுடைய கடமைகளாகும்! அப்படியானால் கடமையாளன் குற்றமே செய்யமாட்டானா? என்ற கேள்வி எழலாம் இல்லையா?

குற்றம் எழலாம்; ஆனால், அந்தக் குற்றத்தைத் திருத்தாமல் இருப்பது, மீண்டும் ஒரு குற்றத்தைச் செய்-