பக்கம்:கன்பூசியஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

15

யவே அவனுக்குத் தைரியத்தைத் தந்துவிடும். அதனால், தனது குற்றங்களையும், குறைபாடுகளையும், தானாகவே உணர வேண்டும். ஆனால், அவ்வாறு தன்னையே வருத்திக் கொள்ளக்கூடிய ஒரு மனிதனை நான் இன்று வரை பார்த்ததே இல்லை.

அதனால்தான் கூறுகிறேன், அவரவர் தங்களிடம் உள்ள குற்றங்களை, குறைபாடுகளைக் களைந்தெறியச் சிறிதும் தயக்கம் காட்டக்கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன்.

கருணையற்ற அதிகாரமும், பக்தியற்ற ஆசாரமும், துன்ப உணர்வற்ற வருத்தமும் எனக்கு அறவே பிடிக்காத விஷயமாகும். மனிதன் ஒவ்வொருவனும் அவரவர் குற்றங்களை முதலில் திருத்திக் கொள்ள வேண்டும். அதைவிட்டு விட்டு பிறருடைய குற்றங்களைத் திருத்தும் முயற்சியில் ஈடுபடக்கூடாது.

ஒவ்வொருவருக்கும் அவரவர் அடைய வேண்டிய குறிக்கோள்கள் இருக்கும். அதில் மீறுவதும் குறைவதும் தவறு, வெளியுலகின் தீண்டுதலால் சங்கீதம் மனித இதயத்திலே இருந்து உதயமாகிறது.

தீமை செய்பவர்கள் யாராக இருந்தாலும்; அவர்களுக்கு நீதி பதிலாக அமைதல் வேண்டும். அன்பு செலுத்துபவர்களுக்கு அந்த அன்பே பதிலாக அமைதல் வேண்டும்.

தன்னைத்தானே ஒறுத்துக் கொண்டு, பிறர் விவகாரங்களில் தாராளமாக இருப்பவன், பிறருடைய வெறுப்புக்கு ஆளாவது துர்லபம்! பிறர் கூறும் விஷயங்களை முதலில் கூர்ந்து கேளுங்கள்; சந்தேகப்பட வேண்டிய செய்திகளை ஒதுக்கித் தள்ளுங்கள். அதற்கு இடம் கொடுக்காதீர்கள்.