பக்கம்:கன்பூசியஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

கன்பூசியஸின்


தன் ஏழ்மை நிலை தனக்குப் பிடிக்கவில்லை என்றால் மன ஆண்மை பெற்றவன் யாருக்கும் கீழ்படிந்து அவன் நடக்க மாட்டான்; நெறியும், நேர்மையுமயற்றவனை வெறுத்தால் அவன் அனைவருக்கும் கீழ்படியவேமாட்டான்.

வில் பயிற்சியில் அம்பு எய்யும் போது அது குறி தவறினால் காரணம் என்ன என்று கண்டு பிடிப்பவன் நேர்மையான மனிதன்! அற்பன் இருக்கிறானே அவன், இது போன்ற சம்பவத்தில் தவறின் காரணத்தைக் காணாமல் பிறர்மேல் அதைச் சுமத்துவான்: பிறரிடம் அதைக்கண்டு பிடிக்கவே முயல்வான்!

நேர்மையாளன் பேச்சில் அடக்கம் ஊஞ்சலாடும்! வீணாகப் பேசி நேரத்தைக் கழிக்காமல் நேர்மையான செயலில் ஈடுபடுவான்; எது தேவையோ அதையே பேசுவான்; எப்போதும் நடுநிலையோடு நிற்பான்.

எல்லாரையும் விரும்புவான் நேர்மையாளன்; பிறரைப் பற்றி நல்லதையே பேசுவான்; நட்பிலே கண்ணியம், தேர்வை காப்பான்; தன்னுடைய முன்னேற்றத்தைப் பிறருடைய முன்னேற்றத்திலேயே பார்த்து மகிழ்வான்: துன்பப்படுவோர் துயர் துடைப்பான்; அவன்தான் நேர்மையான மனிதன்.

இன்றைய உலகில் ஒரு ஞானியைப் பார்ப்பது கடினம்; ஆனால், ஒரு நேர்மையான மனிதனை நான் பார்த்து விட்டால் ஆகாயத்தில் கூடப் பறந்து விடுவேன்! அவ்வளவு மகிழ்ச்சி ததும்பும்.

உலகமெனும் பரந்த வீட்டில் வாழ்பவன் நேர்மையாளன்; உலக வாழ்வில் தன்னுடைய நிலையில் வாழ்பவன்; நேர்மையான சாலையில் வழி நடப்பவன்; பணம் அவனுக்குத் துரும்பு அதற்காக மயங்காதவன்; வறுமை