பக்கம்:கன்பூசியஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

கன்பூசியஸின்


காற்றடித்தால் புற்கள் தலை வணங்குவது போல சீனத்து மக்கள் அந்த ஞானி கூறிய மேலே கண்ட கருத்துகளை தம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் என்று தலை வணக்கி வரவேற்றார்கள் வாழ்த்திக் கொண்டே இருக்கிறார்கள்!

2. கன்பூசியனிசமும்; பொதுநல ராஜ்யமும்

இன்றைக்கு ஈராயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்த சீனநாட்டின் பழமைப் பண்புகளை உருவாக்கி; ஒர் இலட்சியக் கொள்கையை உலகுக்கு அளித்தவர் ஞானி கன்பூசியஸ். அதைத்தான் இன்றும் 'கன்பூசியனிசம்’ என்று உலகம் போற்றுகிறது.

ஈராயிரத்து நூறு ஆண்டுகளுக்கு முன்பு கன்பூசியஸ் வாழ்ந்த காலத்திலிருந்து இன்று வரை கால வளர்ச்சியும் கருத்து வளர்ச்சியும் படிப்படியாக வளர்ந்து வந்துள்ளது. ஆனால், மனித இனத்தின் மனமும்; மனித இயற்கையும் இன்றுவரை மாறாமல் இருக்கின்றன.

கன்பூசியஸ் உயிரோடு வாழ்ந்த காலத்தில் நிலையற்ற உலகு தத்தளிக்கும்போது மனித இனவாழ்வை மாற்ற வேண்டும் என்று எப்படி பரப்புடன் அவர் சிந்தனை செய்தாரோ, அதே பரபரப்புடைய ஒரு சமூக வாழ்வை அடைவதற்கு உலகம் துடித்துக் கொண்டுதான் உள்ளது.

மனிதன் மகிழ்ச்சியோடும், அறநெறிகள் சூழ்ந்த வாழ்வோடும் வாழ்வது எப்படி? என்ற கன்பூசியனிசம் திட்டம் போல உலகில் வேறு எந்த ஞானியும் சிந்தித்ததில்லை என்றாலும், மேனாட்டுத் தத்துவ ஞானத்திற்கும்-சீனத்-