பக்கம்:கன்பூசியஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26

கன்பூசியஸின்

கிரேக்க நாட்டின் அறிவியலாளர்கள் இடையே ஒரு பெரும் போரே நடந்ததால் உண்மைகள் சில உலகுக்குக் கிடைத்தன.

அதனைப்போல, உலகின் தன்மைகளை எதிர் எதிராகப் பிரித்துப் பார்த்ததும் அதே மேனாட்டுத் தத்துவம்தான்! தெய்வீகம்-மானிடம், அரூபம்-தத்ரூபம்; லட்சியம்-நடைமுறை; சுதந்திரம்-அதிகாரம்; தனி மனிதன்-சமூகம் என்பதே அந்த இரட்டைகளாகப் பார்த்த பண்பாகும்!

ஆனால், சீனத்துத் தத்துவம் அத்தகையதன்று; இரட்டைகளை இணைத்து ஒருமுகப்படுத்திப் பார்ப்பது, மனிதன் உலகின் ஓர் அம்சம் அதுபோலவே உலகமும் மனிதனின் ஓர் உறுப்பாகும் என்பதே சீனத் தத்துவம்.

சீனர்களின் இந்த தத்துவத்திற்கு ஆதி அடிப்படையாக இருப்பது 'யாங்-யின்' என்ற தத்துவக் கொள்கையாகும். யாங்-என்றால் ஆண்மை; படைக்கும் ஆற்றலுடையது; உற்பத்தி சக்தி; வானத்துச் சூரியனும் சுவர்க்கம் அல்லது வானகத்திற்கு இணையானது ஈடானது.

'பின்' என்பது பெண்மை; ஒன்றிலிருந்து ஒன்றை கிரகிக்கும் ஆற்றல் வாய்ந்தது. வானத்து நிலவிற்கும- பூமிக்கும் இணையானது. இவை இரண்டும் இயற்கையின் இரட்டை சக்திகள்! இவற்றின் கலப்படப் பொருள்தான் இந்த உலகம்!

ஆண்மை-பெண்மையான 'யாங்-பின்' என்ற இந்த இரு இயற்கை சக்திகள் வானகமும்-வையகமும், சூரியனும் சந்திரனும், ஒளியும் இருளும் பிறப்பும் இறப்புமாகும்!

மனிதன் தனது உடலை பூமியில் இருந்து, அதாவது 'பின்’ எனும் பெண்மையிடம் இருந்துப் பெறுகிறான்!