பக்கம்:கன்பூசியஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

27

ஆத்ம உருவை, வானத்திடம் இருந்து, 'யாங்' எனும் ஆண்மையிடம் இருந்து-பெறுகிறான்!

இந்த யாங்-பின் எனும் தத்துவம் நமது சைவ சமயத்தின் சிவன்-சக்தி, பரன் பரை, அம்மை-அப்பன் என்ற தத்துவத்தை நினைவூட்டுகிறதா-இல்லையா? சிந்தித்துப் பாருங்கள். இதை விவரித்தால் நூல் பெருகும் நமது நோக்கமும் இதுவன்று!

'பாகுயா' அல்லது எட்டு திரிகோணம் எனும் குறிநூல் இந்த தத்துவத்திலே இருந்து பிறந்து, சீன தத்துவத்திற்குரிய தத்துவத் தொட்டிலாக அமைந்தது!

சித்திரக்குறி நூல் என்று இந்நூலைச் சீனர் கூறுவர். நேர் கோடுகளின் அமைப்புகள் பல வகைகளில், ஒரு வட்டத்திற்குள் எட்டு திரிகோடு வகுப்புகளாக அமைந்திருக்கும் ஒரு சின்னமே இந்த எட்டு திரிகோணமாகும்.

சித்திரத்தின் நடுவில் ஒரு வட்டம்! அதனுள் இருப்பவை சிருஷ்டியைக் குறிக்கும் சின்னம். அதைச் சுற்றி எட்டு விதமான திரிகோடுகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு நேரான கோடு (-) 'யாங்' எனும் ஆண்மையைக் குறிக்கும் சின்னம். அதாவது, அனுலோம தத்துவத்தின் சின்னம். ஓர் உடைந்த கோடு (--) 'பின்', எனும் பெண்மையைக் குறிக்கும் சின்னம். அதாவது, விலோம தத்துவத்தின் சின்னம்.

உலகத்தின் எட்டு அடிப்படை மூலங்களை, ரேகா உருவமாக எட்டு திரிக்கிரமம் குறிக்கிறது. அவை, வானகம், பூமி, இடி, தண்ணீர், மலை, காற்று, நெருப்பு. சதுப்பு நிலம்.