பக்கம்:கன்பூசியஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

29


கன்பூசியனிசம்; இது ஓர் அறநெறிகளின் ஒடுக்க நூல்; யார் யார் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற வழிகளைக் கூறும் ஒழுக்க மார்க்கம்! சமுதாய மனிதனைப் பண்படுத்தும் மனிதத் தத்துவம்! சீன மக்களது வழி வழி பரம்பரையினர் கடைப்பிடித்து வந்த ஒரு வாழ்வியல் நடத்தை இயல்!

இரண்டாவது, லே ஓ-ட்சே என்பவர் தொகுத்த டா-ஓஸம்! இது ஒரு ஞான மார்க்க வழிபாடு; இயற்கையின் சக்தி வழியே மனதைப் பக்குவப்படுத்தும் ஓர் உள்ளொளி எனும் ஆன்மீகத் தத்துவ நூல்! அதாவது 'ஆக இயல்'!

மூன்றாவதாக, மோட்-ஸே என்பவர் உருவாக்கிய 'மோசிஸம்' என்ற நூல்! இது அருள்வழியே சமதர்ம நெறியில் புது உலகம் அமைக்கும் முற்போக்குத் தத்துவங்களைக் கொண்டது. இதற்கு 'ஆக்கு இயல்' என்று பெயர்.

நான்காவதாக, 'லீ-ஸிஸம்’ என்ற நூல். இதன் ஆசிரியர் ஹான் பெயிட்ஸே என்பவர்! இது ஒரு சட்ட நூல். சமுதாய ஒழுங்கை, அமைதியை நிலைநாட்டப் பயன்படும் அதிகாரத் தத்தவம், இதனை ஆட்சி இயல் என்றும் கூறுவர் சைனாவில் இப்போதுள்ள கம்யூனிசவாதிகள் அந்த சட்ட இயலைப் பயன்படுத்துகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த நான்கு நூல்களும் ஒன்றுக்கொன்று முரண்பட்டவை என்றாலும், இந்நூல்களின் கருப்பொருளும் அவற்றின் வளர்ச்சிகளும்தான் சீனதத்துவ வரலாற்றின் இன்றைய பண்பும்-பயனுமாகக் காணப்படுகின்றது.

கன்பூசியனிசம் என்றால் என்ன?

கன்பூசியனிசம் என்ற இலட்சியக்கொள்கையை உருவாக்கியவர் ஞானி கன்பூசியஸ் ஆவார்; கன்பூசியனிசம்