பக்கம்:கன்பூசியஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30

கன்பூசியஸின்

என்பது மனித தத்துவத்தை மூலாதாரமாகக் கொண்ட ஒருவித பொது ஒழுக்க சமுதாயப் பண்பாடாகும்.

தனிமனித பண்பில் மேன்மையான ஓர் உயர்வை உருவாக்குவது; பொது மனிதனாக சமுதயத்தில் நல்லுறவுடன் நடப்பது; இந்த இரண்டையும் அன்பு வழியே கடைப்பிடிப்பது; அறநெறிகள் வழியாக இந்த இரண்டையும் வளர்ப்பது; ஒரு தேசிய பண்பாட்டை உருவாக்குவது; அந்தப் பண்பாடு மூலமாக உலகம் முழுவதற்குமாக ஒரு பொது ஒழுக்கத்தைப் பேணிக் காப்பது;

தனிமனிதனுக்குரிய நல்வாழ்க்கையும், அதற்கான சமுதாய அமைதியை உலகமெங்கும் வளர்த்து வளமாக்குவது; இந்த இலட்சியத்திற்காகவே மனிதனின் அறிவு, அறவுணர்ச்சி, கல்வி வளர்ச்சி கலைப்பயிற்சி, பண்டைய கால பழக்கவழக்க ஆசாரங்கள், நல்ல அரசு, வானகசக்தி, இயற்கை கூறுபாடுகள் எல்லாம் பயன்பட்டாக வேண்டும், இதுதான் 'கன்பூசியனிசம்' என்ற சித்தாந்தத்தின் கருப் பொருள்களாகும்,

இந்த சித்தாந்தம் நடக்கக் கூடியதுதானா? என்று சில ஆச்சர்யப்படலாம்! நமது நாட்டு சங்ககாலக் கவிஞரான கணியன் பூங்குன்றனார் என்பவர், எல்லா நாடுகளும் தமது நாடுகள், எல்லா மக்களும் தமது உறவினர்கள் என்ற தத்துவ அடிப்படையில் ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ என்று கவிதை எழுதவில்லையா!

பூங்குன்றனார் கவிதையின் உட்பொருள் என்ன? உலகம் ஒன்றே-மக்கள் அனைவரும் உறவினரே, சகோதரர்களே என்ற ஒரே உலகம், ஒரே சமுதாயம், ஒரே ஆட்சி என்ற பொருள்தானே? இது நடக்குமா? நடக்காதா? என்றா அவர் சிந்தித்தார்? இவரும் கன்பூசியசுக்கு முன்பே இக்கருத்தைப் பாடியவர் தானே!

இந்தக் கருத்தை, நமது இந்திய முன்னாள் பிரதமராக இருந்த இந்திராகாந்தி அம்மையார், தனது சோவி-