பக்கம்:கன்பூசியஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

35

கள். தங்களது சக்திகளை முழுமையாகப் பயன்படுத்தப் படுத்தப்படுவதை அவர்கள் விரும்புவார்கள்.

ஒருவரை ஒருவர் கெடுக்கும் சூழ்ச்சித் திட்டங்கள் அடக்கி வைக்கப்பட்டு அவை வளரவிடாமல் தடுக்கப்பட்டன. திருடர்கள், கொள்ளைக்காரர்கள், துரோகிகள் போன்றோர் தலைகாட்ட முடியாது. அதனால் எந்தவிதத் தீமையும் பயமும் ஏற்படாது. ஒவ்வொரு வீட்டின் தெரு வாயில் கதவும் எப்போதுத் திறந்தபடியே கிடந்தது. இதுதான் எல்லோரும் போற்றும் மகத்தான் 'பொது நல யுகம்' என்றார்.

தத்துவஞானி பிளாட்டோ உருவாக்கியக் குடியரசை நடத்திக் காட்டிட மாவீரன் அலெக்சான்டர் பயன்பட்டதைப்போல, கன்பூசியசும் தனது இலட்சிய பொது நலராஜ்ஜியத்தை உருவாக்கிக் காட்டிட ஏதாவது ஓர் அரசன் கிடைக்கமாட்டானா என்று ஆசைப்பட்டார்.

'ஓர் அரசாங்கத்தை எப்படி நடத்துவது என்ற அறிவு ஒருவனுக்கு வானகத்தால் வழங்கப்பட்டிருக்கிறது. அந்த அறிவைத் தங்களது மன்னன் முன்பு வைப்பது அவர்களின் கடமை என்று கன்பூசியஸ் கூறினார்.

இந்த ஆசையால் அவர் எந்த அரசன் தன்னை ஒரு ஞான குருவாக ஏற்பான் என்று, அப்போதிருந்த ஒவ்வொரு சீன அரசுகளையும் நாடினார் அங்கங்கே அரசியல் சூதுக்களும், சூழ்ச்சிகளும், போட்டிப் பொறாமைகளும், சுயநலங்களும், சுகபோகங்களும், பிறரை நம்பாமை எண்ணங்களும் அவருக்கு எதிராகக் கிளம்பின. அதனால் அவர் வகித்த பொறுப்புக்கள், சில பதவிகள் அனைத்தையும் விட்டுவிட்டு ஊர் ஊராக ஓடினார்-நாடோடியைப் போல.